Posts

Who am I? Essential Teachings of Bhagwan Ramana Maharshi – “Naanaar”/ “Naan Yaar” நானார்/ நான் யார்?

=================================================================

கவனிக்க:  ‘நானார்’ மூல நூலில் உள்ள தமிழ் எளிமைப்படுத்தப்பட்டு , ஆங்கில  உரையுடன் இங்கே தரப்படுகிறது.

=================================================================

Introduction

When young Bhagwan Ramana Maharshi was residing in Virupaksha cave at the Arunachala Hill, Sivaprakasam Pillai , an officer in the Revenue Department and an intellectual, heard of the young Swami. At his very first visit in 1902, he was captivated by the Swami’s aura and became his life-long devotee.

The young Swami was maintaining silence, but Shivaprakasam Pillai was determined to receive teachings him. He brought a slate and started writing questions in Tamil one by one and requested Ramana to write the answers in the slate! This way, Ramana answered  fourteen questions of Pillai. These were later recorded in a note book by Pillai and then expanded and arranged in the form of a booklet  “நானார்? (நான் யார்)” “Who am I?”  This is perhaps the most concise and most widely appreciated prose exposition of the Maharshi’s philosophy, given by the Maharshi at his age of 23, which got widely published much later, in the year 1923.

[NOTE: Another prominent work in prose containing Ramana’s supplementary teachings (in Tamil) titled விசார சங்கிரகம்  (“Vichara Sangraham”) was recorded during his early years in Virupaksha Cave by Gambhiram Sesha Iyer. This also happened some time in 1900-1902. This booklet first got published in the year 1930]

The teachings contained in these two  books remained authentic, needing no future revisions by Bhagvan. In his long life spanning 71 years, Sri Ramana wrote so many other poetic works in Tamil, Malayalam, Telugu and Sanskrit, but the Tamil prose version still remained the basic teaching that found more exposition in those future works.

The Tamil ‘Naanaar’ written almost a century ago will be somewhat difficult to read and grasp for the present day Tamils, because the original contains so many sanskrit words and also the narrative and parsing styles of those days were somewhat different.

Hence I have given here the write-up in a simplified Tamil fairly adhering to the original flow, only doing minimal changes and translating the sanskrit words to Tamil to the extent possible. I am also giving together the English translation, question by question.

I have also done some very minimal shifting of paragraphs here and there and brought down the number of questions to 14 from the present printed versions that contain 28 questions (with the same answer content).

Young Ramana Maharshi

                                                 <>

Sivaprakasam Pillai

 

 

 

நான் யார்? ‘Naan yaar?’ Who am I?

எல்லாருமே துக்கம் என்பதே இன்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புகிறார்கள்; எல்லாருக்குமே தன்னிடத்தில் தான் மிக அதிகம் பிரியம் இருக்கிறது; எங்கு சுகம் இருக்கிறதோ அங்கு பிரியம் இருக்கிறது. மனம் வேலை செய்யாது இருக்கும் ஆழ்ந்த உறக்கநிலையில் தினமும் அந்த சுகத்தையே சுபாவமாகவே அனுபவிக்க முடிகிறது. ஆக, தன்னுள்ளேயே  பொதிந்திருக்கும் அந்த சுகத்தை அடைய தன்னைதானே அறிதல் வேண்டும். அப்படி அறிவதற்கு ‘நான் யார்’ என்னும் ஞான ஆராய்ச்சியே முக்கிய சாதனம் ஆகும்.

[All people always aspire for happiness, totally free from sorrow. Everyone loves himself/ herself the most. Where there is happiness, there is liking. In deep sleep state, when mind is totally not functioning, we are able to enjoy that happiness naturally. So, to attain the happiness that is really lying inside each of us, we have to understand our own self. For that, the self inquiry “Who am I” is the prime technique.]

  1.  நான் யார்?  

ஏழு விதமான தாதுக்களால் (அதாவது, குருதி நீர், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலம் இவற்றால்) உருவாகியுள்ள இந்த ஸ்தூலமான உடம்பு நான் அல்ல. ஒளி, ஒலி, சுவை, மணம், தொடு உணர்வு என்னும் ஐம்புலன்களை அறிகின்ற கண், காது, மூக்கு, நாக்கு, தோல் எனும் அறிவு உறுப்புகளாகிய  ஐம்பொறிகளும் நானல்ல.  பேசுதல், நடத்தல், கொடுத்தல், மலம் கழித்தல், சுகித்தல் என்னும் ஐந்து தொழில்களை செய்யும் வாய், கால்கள், கைகள், குதம், பிறப்புறுப்பு என்னும் செயல் உறுப்புகளும் நானல்ல.

மூச்சு விடுதல், பிரித்து நீக்கல்,ஜெரித்தல் போன்ற அகத் தொழில்களை இயக்கும்  பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் எனும்  ஐந்து வாயுக்களும் நானல்ல. நினைக்கின்ற மனமும் நானல்ல. இப்படி எல்லா  விஷயங்களும், தொழிற்பாடுகளும்  அற்று அதே சமயத்தில் விஷயங்களைப்பற்றிய நுண்ணுணர்வுகளோடு (வாசனைகளோடு) மட்டும் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானல்ல.

இப்படி ‘நானல்ல’ ‘நானல்ல’ என்று தள்ளிய பிறகும் தனித்திருக்கும் அறிவே நான். அந்த அறிவின் சொரூபமே (மெய்யியல்பே) சச்சிதானந்தம்.

[1. Who am I?

I am not the gross body made of seven tissues (plasma, blood, muscle, fat, bone, bone marrow and seminal fluid); I am not the five sense organs (eyes, ears, nose, tongue and skin) that sense  sight, sound, smell, taste and touch; I am not the five physical organs (mouth, legs, hands, anus and sex organ) that do the acts of speaking, walking, giving, excreting and procreating).

I am not the five pranas (prana, apana, samana, udana and vyana) that control body functions like breathing, digestion etc. I am not the mind that thinks. I am not even the ignorance (ajnana) which is free from actions and sensual inputs but remains associated with vasanas (subtle mental leanings). 

Whatever awareness that remains and stands alone even after negating and discarding all these, is the real “I”. The true nature of this “I” is sat-chit-ananda (Existence-Knowledge-Bliss).]

2.  இம் மெய்யியல்பின்  அனுபவம்  (சொரூப தரிசனம்) எப்போது உண்டாகும்?

எல்லா அறிவிற்கும் எல்லா செயல்களுக்கும் காரணமாகிய மனம் அடங்கிவிட்டால்,  இந்த உலகம் உண்மை என்ற பார்வை நீங்கிவிடும். கயிறைப்  பார்த்து பாம்பு என்று தவறாக என்னும் மன நிலை நீங்கினாலே ஒழிய, கயிறை கயிறாகவே காணும் அறிவு வராது. அதுபோலவே ‘காணும் இந்த உலகம் உண்மை’ என்ற எண்ணம் நீங்கினாலேயொழிய எப்போதும் உள்ள சுயநிலையைக் கண்டுணர்வது முடியாது.

[  2. When can one gain the knowledge of this real “I”?

Seeing the rope as snake

When the mind, which is the basis for all perceptions and actions stops functioning, we will be freed of the notion that the world is real. Only when the misconception of seeing a rope as a snake is removed, the knowledge of rope as a rope  will dawn. In the same way, unless we remove the idea that the world we see is real, what truly exists forever cannot be grasped by us.]

3. மனதின் இயல்பு என்ன?

மனம் என்பது ஆத்மாவின் ஒரு அதிசய சக்தி. அது தான் எல்லா நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் தனியாக மனம் என்று ஒரு பொருளும் இல்லை. ஆக, நினைப்பு என்பது தான் மனதின் சொரூபம். அதுபோலவே, நினைவுகளைத் தவிர்த்து இவ்வுலகம் என்ற பொருள் வெளியில் இல்லை. ஆழ்ந்த தூக்கத்தில் நினைவுகளே இல்லை. அந்த நிலையில் உலகமும் இல்லை. ஆனால் விழிப்பு நிலையிலும் கனவுடன் கூடிய உறக்க நிலையிலும் நினைவுகளும் இருக்கின்றன; உலகமும் இருக்கிறது.

ஒரு சிலந்திப்பூச்சி எப்படி தன்  உடம்பிலிருந்தே வெளியில் ஒரு நூல் இழையை நூற்று மறுபடியும் தன்னுள்ளே இழுத்துக்கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்தில் இருந்தே இவ்வுலகத்தைத் தோற்றுவித்து மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக்கொள்கிறது. மனம் ஆத்ம சொரூபத்திலிருந்து  வெளிப்படும்போது இவ்வுலகமும் தோற்றம் பெறுகிறது. அதனால் உலகம் தோன்றும்போது ஆத்மாவின் சொரூபம் தோன்றாது. ஆத்மா தோன்றும்போது (தானே பிரகாசிக்கும்போது) இவ்வுலகம் தோன்றாது.

‘இந்த மனதின் உண்மை நிலை என்ன?’ என்று விசாரித்துக்கொண்டு போனால் ‘தானே’ மனமாய் முடியும். ‘தான்’ என்பது ஆத்ம சொரூபமே. மனம் எப்போதும் ஸ்தூலமாய் உள்ளவற்றைப் பிடித்துக்கொண்டே நிற்கும். தனியாய் நிற்காது. இந்த மனமே ‘சூட்சும  சரீரம்’ (நுண்ணுடல்) என்றும் ‘ஜீவன்’ என்றும் சொல்லப்படுகிறது.

[ 3.  What is the nature of mind?

Mind is a wonderful power of Atman (Self). It is the one creating all thoughts. If all thoughts are removed, there is no substance called mind. Therefore, ‘thinking’ is the real nature of mind. Likewise, without thoughts, there is no outside world. When in deep sleep, there are no thoughts; no world too, in that state. But in waking and dreaming states, there are thoughts and also the world.

Just as spider produces a yarn from its body and also withdraws it, the mind creates the external world from inside and also withdraws it. When mind comes outward from its true source Atman, the world is perceived. As long as world is seen, Atman cannot be perceived. When Atman is perceived (shines forth), the world cannot be seen.

When one inquires inwards as to what the true nature of  mind is, one will end up in Self. The self is nothing but the real nature of atman. The nature of mind is such that it can exist only by clinging to  gross matters. It has no independent existence. This mind is also known as subtle body or jeeva (soul).]

4.  மனதை அடக்குவது எப்படி?

இந்த உடம்பிலிருந்து ‘நான்’ என்று எந்த உணர்வு கிளம்புகிறதோ அதுவே தான் மனம். இந்த ‘நான்’ உணர்வு உடம்பின் எந்தப் பகுதியிலிருந்து கிளம்புகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் அது இதயத்திலிருந்து கிளம்புகிறது என்பது தெரியவரும். ஆக, இதயமே மனதின் பிறப்பிடம். ‘நான், நான்’ என்று எண்ணிக் கொண்டிருந்தாலே  அது இதயத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றுக்கும் ‘நான்’ என்ற நினைப்பு தான் முதல் நினைப்பு. இது எழுந்த பிறகே மற்ற எல்லா  எண்ணங்களும் எழுகின்றன. அதாவது, ‘தன்மை’ தோன்றிய பிறகே ‘முன்னிலை, படர்க்கை’கள் தோன்றுகின்றன. ஆக, ‘தன்மை’ இல்லாவிட்டால், முன்னிலை படர்க்கைகளும் இல்லை!

‘நான் யார்’ என்ற விசாரணையிலேயே மனம் அடங்கும். ‘நான் யார்’ என்று கேட்கும் நினைப்பும் கூட, ‘பிணம் சுடு  தடியைப் போல’ மற்ற எல்லா நினைப்புகளையும் அழித்து,  தானும் அழிந்துவிடும். (அதாவது, பிணத்தை  எரிக்க உபயோகிக்கும் விறகுக்கட்டைகள் பிணத்தை எரித்துவிட்டு தாமும் எரிந்து சாம்பலாகி விடுவதைப்போல).

‘நான் யார்’ என்ற விசாரணைக்கு இடையே பிற எண்ணங்கள் எழுந்தால், அந்த எண்ணங்களைப் பின்பற்றிப்  போய் அவற்றை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்காமல், ‘இந்த எண்ணங்கள் யாருக்கு உண்டாயின?’ என்று விசாரிக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் வெளிக்கிளம்பினால்தான் என்ன? கிளம்பும் போதே ‘இது யாருக்கு உண்டாயிற்று?’ என்று விசாரித்தால், ‘எனக்கு’ என்று தோன்றும். அப்படி ‘எனக்கு’ என்று தோன்றும் அந்த ‘நான்’ யார் என்று மீண்டும் விசாரித்தால் மனம் தன பிறப்பிடத்துக்குத் திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் அடங்கிவிடும்.

இப்படிப் பழகப் பழக, மனத்திற்குத் தன்  பிறப்பிடத்திலேயே தங்கியிருக்கும் சக்தி அதிகரிக்கிறது.

எப்போதெல்லாம்  சூட்சுமமான இந்த மனம், மூளை மற்றும் பொறி புலன்கள் மூலம் வெளிப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஸ்தூலமான  உலகப் பொருட்களும் நாம ரூபங்களும் (பெயர், உருவங்களும்) தோற்றமளிக்கின்றன. மனம் இதயத்திலேயே தங்கிவிட்டால் இந்த நாம ரூபங்களும்   மறைந்துவிடுகின்றன.   இப்படி மனத்தை வெளிவிடாது இதயத்திலே தங்க வைத்துக்கொண்டிருப்பதைத் தான் ‘அகமுகம்’ அல்லது ‘அந்தர்முகம்’ என்பார்கள். இதயத்திலிருந்து மனம் வெளிப்படுவதைத்தான் ‘பகிர்முகம்’ என்பார்கள் .

இவ்வாறு மனம் இதயத்தில் தங்கவே, எல்லா நினைவுகளுக்கும்  மூலமான ‘நான்’ என்பது போய், எப்போதும் உள்ள ‘தான்’  மாத்திரம் தான் விளங்கும். ‘நான்’ என்கிற உணர்வு சிறிதுகூட இல்லாத இடமே ‘சொரூபம்’ ஆகும். அதுவே ‘மௌனம்’ என்றும் சொல்லப்படும்.

[ 4.  How to control the mind?

 The feeling that springs up from the body as “I” is the mind. If we investigate from where this “I” rises up in the body, we can identify that its location is the heart. Thus heart is the birth place of the mind. If we keep contemplating “I”, “I”, it would automatically lead to the heart. For all the thoughts arising from mind, “I” is the first thought. Only after “I” arising, all other thoughts arise. That is, only after the first person rises, the second and third person come into picture. Without first person, second and third person have no existence!

The mind can calm down by the very inquiry ‘Who am I?’. Even the thought ‘Who am I’ will get annihilated after quenching all other thoughts; it is like the wood used for burning the corpse in a pyre getting itself burned to ashes finally.

If any other thoughts rise up while inquiring ‘who am I’, instead of pursuing the thoughts with the attempt to terminate them, we should rather inquire “to whom this thought has arisen?”. The answer will be “to me”. Now if you inquire who is that “me”, it will naturally lead us back to the origin of “I” thought. This way the thought too would subside.

By constantly practicing like this, the capacity of the mind to stay put at its source increases.

Whenever this subtle mind goes outward through the brain or through sense organs or organs of action, the gross external world and all things with names and forms get manifested. If the mind stays put in the heart, the world and things with names and forms too disappear. This practice of containing the mind within the heart without allowing it to go out is called ‘aha mukham‘ or ‘antar mukham‘ (dwelling-in). The mind coming outward from heart is called ‘bahir mukham‘ (emanating out).

When the mind stays confined in the heart, the “I” which is the root of all thoughts will go and only the ever-present ‘Self’ remains. The status of ‘swarupam‘ (True Self) is where the feeling of “I” is totally absent. It is also known as mounam –silence.

5.  ஞான திருஷ்டி என்பது என்ன?

சும்மா இருப்பதற்குத்தான் ‘ஞானதிருஷ்டி’ என்றும் பெயர். சும்மா இருப்பது என்பது மனதை ஆன்ம சொரூபத்தில் நிலைக்கச் செய்வது தான்; அப்படியின்றி, பிறர் மனதில் உள்ளதைப் படித்தல்,  கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் முக்காலத்திலும் நடப்பதை அறிதல், எங்கோ  தொலை தூர தேசத்தில் நடப்பதை அறிதல் போன்ற சித்திகளெல்லாம்  ஞானதிருஷ்டி ஆகமாட்டா.

 

[ 4.  What is wisdom-insight (Jnana Drishti)?

To remain quiet (just ‘being’) is also known as wisdom-insight. Just being (quiet) is nothing but establishing the mind in the Self (Atman). On the contrary, siddhis (yogic powers) like reading others’ minds, knowing the past, present and future events, knowing the happenings at a distant place etc are not signs of wisdom-insight.]

6.  ஆன்ம சொரூபம் என்பது உண்மையில் என்ன?

உண்மையில் எப்போதும் உள்ளது ஆன்மசொரூபம் ஒன்றே. உலகம், உயிர்கள், இறையுருவங்கள் (ஜகத், ஜீவ ஈஸ்வர ரூபங்கள்)  எல்லாம் தண்ணீரில் மூழ்கியுள்ள சிப்பி வெள்ளி போல் காட்சியளிப்பதைப்  போன்ற கற்பனைத் தோற்றங்களே. இவை மூன்றும் ஒரே சமயத்தில் தோன்றி ஒரே சமயத்தில் மறைகின்றன. உண்மையில் சொரூபமே உலகம்; சொரூபமே நான். சொரூபமே ஈஸ்வரன். எல்லாமே  கடவுளின் தோற்றம் (சிவசொரூபம்) தான்.

[6. What is the real nature of Self?

What exists for ever is nothing but the Self. The appearance of the world, living beings and forms of Gods are all like seeing seashells lying in water as if they are silver. These three are perceived to appear together and also disappear together. The reality is that Self is the world; Self is “I”. Self is God. Everything is appearance of God (Shiva Swarupam).

7.  மனத்தை அடக்க  வேறு வழிகள் இல்லையா?

மனம் அடங்குவதற்கு விசாரணையைத்  தவிர வேறு தகுந்த முறைகள் (உபாயங்கள்) இல்லை. மற்ற முறைகளைக்கொண்டு அடக்கினால், மனம் சற்றே அடங்கியது போல் இருந்துவிட்டு, மறுபடியும் வெளிக்கிளம்பிவிடும்.

பிராணாயாமம் எனப்படும் மூச்சடக்கத்தால் கூட மனம் அடங்கும். ஆனால், பிராணன் அடங்கியிருக்கும் வரையில் மனமும் அடங்கி இருந்துவிட்டு,  பிராணன் வெளிப்படும்போது தானும் வெளிப்பட்டு,  வாசனைகளால் உந்தப்பட்டு அலைய ஆரம்பித்துவிடும். மனதுக்கும் பிராணனுக்கும்  இருப்பிடம்  ஒன்றே.

(முன்பே சொன்னபடி) நினைவே மனதின் சொரூபம். ‘நான்’ என்னும் நினைப்பே மனதின் முதல் நினைப்பு. அதுவே தான் அகங்காரம். அகங்காரம் எங்கிருந்து உற்பத்தியாகிறதோ அங்கிருந்தே தான் மூச்சும் கிளம்புகிறது. ஆக, இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு  உள்ளவை — மனம் அடங்கும்போது பிராணன் அடங்கும்; பிராணன் அடங்கும்போது மனமும் அடங்கும்.

ஆனால், ‘சுஷுப்தி’ எனப்படும் கனவுகளற்ற ஆழ்ந்த  உறக்க நிலையில்  மனம் அடங்கியிருந்தாலும், பிராணன்   அடங்காமல் செயல் பட்டுக்கொண்டுதான் இருக்கும். உடம்பின்  பாதுகாப்புக்காகவும்,’இவன் செத்துப்போய்விட்டானோ’ என்று மற்றவர்கள் சந்தேகப்படாமல் இருப்பதற்காகவும்,  இறைவனின் நியதியால் இப்படி  ஏற்பட்டிருக்கிறது.  விழிப்பு நிலையிலும், சமாதி நிலையிலும் மனம்  அடங்கும்போது பிராணனும் அடங்குகிறது. பிராணனை ‘மனதின் ஸ்தூல வடிவம்’ என்று சொல்வதுண்டு.

மரண காலம் வரை, மனம் பிராணனை உடம்பில் வைத்துக்கொண்திருந்து உடம்பு சாகும்போது, மனம் பிராணனைக் கவர்ந்துகொண்டு போய்விடுகிறது.  ஆகையால், பிராணாயாமம் என்பது மனதை அடக்க உதவியாக இருக்குமே தவிர மனதை அழிக்க உதவாது.

பிராணாயாமம்  போலவே கடவுளின் உருவத்தை தியானம் செய்வது, மந்திர ஜபம் செய்வது, உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது இவையெல்லாமும் மனத்தை அடக்குவதற்கு உதவியாய் இருப்பவைகளே. உருவத் தியானத்தாலும், மந்திர ஜெபத்தாலும் மன ஒருமைப்பாடு கிடைக்கும். எப்போதும் அங்கும் இங்கும்  ஆடியபடியம், துதிக்கையை வீசியபடியும்  இருக்கும் யானையின் தும்பிக்கையில் ஒரு சங்கிலியைக் கொடுத்தால், அது மற்றவற்றைத் துழாவுவதை விட்டுவிட்டு சங்கிலியைப் பிடித்துக்கொண்டே செல்லுமல்லவா?  அதேபோல எப்போதும் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் மனதிற்கு ஒரு இறை நாமத்தையோ அல்லது உருவத்தையோ  தந்து பழக்கினால், அதையே பற்றிக்கொண்டு நிற்கும்! மனம், எண்ணற்ற நினைவுகளால் விரிந்துகொண்டே போவதால், ஒவ்வொரு நினைவும் மனதை மேலும் பலவீனமாக்குகிறது. நினைவுகள் அடங்க,அடங்க அதனால் மனம் ஒருமைப்பாடு அடைகிறது. அதனால் பலம் பெரும் மனதிற்கு ஆத்ம விசாரம் எளிதாய் கைகூடும்.

உப்பு, புளிப்பு, காரம் போன்ற   சுவைகள் மிகாமல், மென்மையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய சாத்வீகமான உணவு உட்கொள்வது எல்லா நியமங்களிலும் சிறந்தது. இப்படிப்பட்ட  சாத்வீகமான உணவை மிதமாக உண்பதை  நியமமாகக் கொண்டால், மனதிலும் சத்துவ குணம் அதிகரிக்கும். அது ஆத்ம விசாரத்திற்கு  உறுதுணையாக இருக்கும்.

[7. Aren’t there any other methods to control the mind?

To quieten the mind, there are no other adequate methods than self inquiry. If you attempt to control the mind by any other technique, it would temporarily quieten for a while and spring up again.

Through pranayama (breath control) too the mind can be quietened; as long as the breath is held, the mind will be calm and once breathing starts, mind too will come out and start wandering. The source of mind and Prana are one and the same.

(As mentioned earlier) the very form of mind is thoughts. The very first thought of the mind is “I”. It is indeed the ego. The origin from where ego emanates is the origin for prana too. Hence both are interrelated. When the mind stops, prana stops; when prana stops, mind too stops.

Jagrat – Swapna-Sushupti (Waking state, dream state, and dreamless sleep state)

But in the state of sushupti (dreamless sleep), even though mind does not work, prana will still be active. It has been ordained so by God in order to protect the body and also avoid possible doubt by others whether the person is dead. Only in waking state and in the state of samadhi, prana stops when mind stops. Prana is also referred as the gross form of mind.

Till the time of death, the mind keeps prana as its associate in the body; upon death, the mind snatches prana and escapes together. Hence pranayama can help in controlling the mind, but not in annihilating the mind.

Like pranayama, meditating the form of God, mantra japa (chanting a mantra), food control etc are helpful in controlling the mind. Both meditation of God’s form and mantra japa can help focus the mind at one point. The nature of elephant is to keep swaying its body and swinging the trunk here and there; suppose we give a chain to grip with the trunk, the elephant will stop its unwanted swinging actions and keep holding the chain. In the same way, if the mind is trained to hold on to a name or form, it will stop from wandering. The mind by nature expands to countless thoughts and each thought potentially weakens the mind. The more and more thoughts subside, the better is the ability to concentrate the mind. A mind strengthened this way becomes conducive for self-inquiry easily.

Consuming soft and easily digestible food having moderate content of salt, sour and spice will be a very conducive discipline for controlling the mind. Satva Guna (quality of purity in thought) will increase if such satvik (soft and mild) food is consumed in moderation. It will be of great support for practicing self-inquiry.]

 

.

.8.  மனதில் விஷய வாசனைகள் (புலன் நினைவுகள்) அளவில்லாமல் எழும்பி  வந்துகொண்டே இருக்கின்றனவே, என்ன செய்வது? செய்த பாவங்களை பற்றிய நினைவுகளும் வந்து அழுத்துகின்றனவே?

காலம் காலமாக உலகியலில் ஆழ்ந்து, புலன்கள் மூலம் அனுபவித்த இன்ப துன்பங்களின் வாசனைகள் (விஷய வாசனைகள்) காரணமாக மனதில் எண்ணங்கள் கடலலைகள் போல அடுத்தடுத்து எழுகின்றன. அவையெல்லாம் தனது ஆத்ம சொரூபத்தை தியானிக்க தியானிக்க அழிந்துவிடும். ‘எல்லா வாசனைகளையும் ஒடுக்கி, சொரூபம்  மாத்திரமே இருக்கும் நிலையை அடையமுடியுமா?’ என்றெல்லாம் சந்தேகப் பட்டுக்கொண்டிருக்காமல் சொரூப தியானத்தை விடாப் பிடியாகப் பிடிக்க வேண்டும்!

மனதில், நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு இல்லை. மனம் ஒன்றே. மனதில் எழும் வாசனைகளே நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகின்றன. நல்ல எண்ணங்கள் எழும்போது நல்ல மனம் என்றும் கெட்ட எண்ணங்கள் எழும்போது கெட்ட மனம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவன் எப்பேர்ப்பட்ட பாவியாக இருந்தாலும் சரி, ‘நான் பாவியாயிற்றே? என்னாலும்  கடைத்தேற முடியுமா?’   என்று ஏங்கி அழுதுகொண்டிருக்காமல் ‘நான் பாவி’ என்ற எண்ணத்தை அறவே ஒழித்து சொரூப தியானத்தை ஊக்கமுடன் செய்து வந்தால் அவன் கண்டிப்பாய் கடைத்தேறுவான்.

[8. What to do as sensual thoughts keep on arising non-stop in the mind? What about the thoughts of sins committed in the past that keep on arising too?

As we have been indulging worldly life in satisfying our sense organs and experienced both pleasure and pain out of them since time immemorial (across several births), their vasanas (subtle memories / residual thoughts) cause unceasing onslaught of thoughts like sea waves in the present. But they will all die if we persist with meditation on Self. Do not harbor doubts  as to whether it ever possible to remain absorbed fully in Self by eradicating all vasanas, but keep persisting with meditating on Self without slackness.

There are no two minds like a good mind and a bad mind! Mind is one. Only the nature of vasanas that spring up from mind make it good or bad. When good thoughts arise, mind is said to be good; when bad thoughts arise, mind is said to be bad.

However gruesome the sin be, let the sinner not keep crying by harboring a thought like ‘what an awful sinner I am; how can I ever be absolved of my sin?’.  Let him engage in the meditation of Self enthusiastically and he is sure to find salvation.]

9.  விசாரணை எதுவரை வேண்டும்? வைராக்கியத்தின்  அவசியம் என்ன?

மனதில் எதுவரை விஷய வாசனைகள் இருக்கின்றனவோ அதுவரையில் ‘நான் யார்’ என்ற விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற, அவற்றையெல்லாம் உடனுக்குடன் அவை உற்பத்தியாகும் இடத்திலேயே நசித்துப் போடவேண்டும்

வெளி விஷயங்களை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை எனப்படும். இப்படித் தனக்கு அந்நியமானவற்றை நாடாதிருத்தல் வைராக்கியம் என்றால், தன்னை விடாதிருத்தலே ஞானம் ஆகும். பார்க்கப் போனால் உண்மையில் இவை இரண்டும் ஒன்றுதான்.

முத்துக்குளிப்பவர்கள் எப்படி தம் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு ஆழ்ந்து மூழ்கி கடலின் அடியில் கிடக்கும் முத்தை எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி, ஆத்ம முத்தை அடையலாம்! ஒருவன் தன் ஆத்மசொரூபத்தை அடையும் வரையில் எப்போதும் சொரூப தியானத்தை விடாது செய்வானேயானால் அந்த சாதனை ஒன்றே போதும். கோட்டைக்குள் எதிரிகள் உள்ளவரை அவர்கள் அதிலிருந்து வெளியே வந்துகொண்டேயிருப்பார்கள். வெளியே வரவர அவர்களையெல்லாம் வெட்டிக்கொண்டே இருந்தால் கோட்டை நம் கைவசமாகிவிடும்!

[9. How long should self-inquiry be done?  What is the need for dispassion?

As long as subtle desires / residual thoughts on sense enjoyments exist in mind, one should continue with the “Who am I” self-inquiry. As thoughts spring up from mind one after another, they should be crushed then and there at their very root.

Not seeking sensual gratification from external objects is Vairagya (dispassion) or desirelessness. If not seeking what is outside oneself is Vairagya, keeping a firm hold of one’s real self is Jnana (Wisdom). In a way, both are same.

Just in the same way divers tie  stone to their waists and dive deep into the sea to gather pearl shells, everyone can dive deep within himself with dispassion and pick the pearl of the Self. If one ceaselessly practices meditation of Self till he attains the experience of the Self, that very sadhana (spiritual practice) is good enough. As long as enemies are inside the fort, they will keep on coming outside; if you kill them one after the other as they come out, the fort will soon be conquered by you.]

10.  விசாரணை மார்க்கத்தில் இறைவன், குரு  இவர்களின் பங்கு என்ன? பக்தி, சரணாகதி இவற்றின் பொருளென்ன?

தன் விருப்பமோ முயற்சியோ இன்றி சூரியன் தன் நியதிப்படி உதிக்கும்போது, பூதக்கண்ணாடி தீயை உண்டாக்குவது, தாமரை மலர்வது, நீர் ஆவியாகி வற்றுவது, உலகோர் விழித்தெழுந்து தம் அன்றாடக் காரியங்களில் ஈடுபடுவது எல்லாம் நடக்கின்றன. சூரியன் மறைந்தவுடன் எல்லாம் அடங்குகின்றன. காந்தத்தின் முன்னே ஊசி காந்தத்தை நோக்கிக் கவர்ந்து இழுக்கப்படுகிறது . இவை போலவே, வேண்டுதல் வேண்டாமை இன்றி இறைவன் (ஈசுவரன்) நடத்தும் (படைத்தல், காத்தல், அழித்தல் எனும்) முத்தொழில்களுக்கு உட்பட்டு உலகோர் தத்தமது கர்ம வினைப்படி காரியங்களை செய்து, பின் பின் அடங்குகின்றனர்.

உலகோரின் காரியங்களால் இறைவனுக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அவரை ஒரு கருமமும் ஒட்டாது. சூரியன் உதிப்பதால் ஏற்படும் நிகழ்வுகள் எப்படி சூரியனுக்கு சம்பந்தம் இல்லையோ, எப்படி மண், நீர், காற்று, தீ என்னும் நான்கு பூதங்களின் தாக்கத்தால் ஐந்தாவது பூதமான ஆகாயம் எவ்வித பாதிப்பும் அடைவதில்லையோ அவ்வாறே இறைவனும் உலகினரின் கர்மங்களால் பாதிக்கப் படுவதில்லை.

கடவுளும் குருவும் முக்தியடைவதற்கு வழிகாட்டுவார்களே அல்லாது தாமாகவே ஜீவர்களை முக்தியில்  கொண்டுபோய்ச் சேர்க்க மாட்டார்கள்.

கடவுளும் குருவும் உண்மையில் வேறு வேறு அல்லர். புலி வாய்க்குள் சிக்கிய பிராணி எப்படித் திரும்பிவராதோ, அவ்வாறே குருவின் அருள் பார்வையில் பட்டவர்கள் அவரால் காப்பாற்றப்படுவார்கள்; ஆனாலும் குரு காட்டிய வழிப்படி தவறாது நடத்தல் அவசியம்.

எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். ஆத்ம சிந்தனையைத் தவிர வேறு சிந்தனை எதுவும் கிளம்புவதற்கு சிறிதும் இடம் தராமல் எப்போதும் ஆத்ம நிஷ்டையிலேயே இருப்பதே தன்னை இறைவனுக்கு சமர்ப்பிப்பதாகும். இறைவனின் மீது எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவர் தாங்கிக் கொள்வார். எல்லாக் காரியங்களையும் இறைவனின் சக்தியே நடத்திக்கொண்டிருக்கிறது; நாம் அதற்கு அடங்கிப் போகவேண்டும். அப்படி அடங்காமல் ‘இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்’ என்று சதா சிந்தித்துக்கொண்டே இருப்பது எதற்காக?  ரயில் வண்டி எல்லா பாரங்களையும் சுமந்து செல்கிறது என்பது நமக்குத் தெரியும். அப்படி இருந்தும், அதில் பயணம் செய்யும் நாம் நம் மூட்டையை அதில் இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாய் இல்லாமல், மூட்டையை நம் தலை மீதே சுமந்துகொண்டு பயணித்தால் எத்தனை சிரமம்?

[10.   In the path of Self-Inquiry, what is the role of God and Guru? What is the relevance of bhakti (devotion) and saranagathi (surrender)?

The Sun rises as a matter of routine without any will or effort of its own; as its effect, the lens  produces heat out of sun rays; the lotus blossoms; water evaporates and drying happens; people get up and engage themselves in their daily chores. When the sun sets, all these activities cease. When there is a magnet, the needle gets attracted by it. In a similar way, God, as eshwara,  without any desire or aversion of His own, carries out His triple action — creation, sustenance and destruction and as its consequence, the people in the world, as per their karma, do their acts and then settle.

God has nothing to gain from the activities of the people of the world. No karma ever touches Him. Just as the sun is never affected by the various activities that happen in the world when it rises, just as the sky (the 5th element)  is never affected by any changes in the four other elements — earth, water, air and fire, God too is never affected by the activities of the people in the world.

God and guru will only show the way for liberation and they would not on their own take the souls to liberation.

In fact, God and Guru are not two different entities. Just as a creature caught in the mouth of a tiger will never come back alive, those who have been blessed by the holy look of a guru will always be saved by him. Yet, it is very important to follow the path shown by the guru.

The best devotee is one who dissolves his own identity in God who is the indweller. Surrendering oneself to God really means remaining steadfast in the contemplation of Self with no thoughts other than ceaseless thought of the Self. God can bear any amount of weight put on Him. All activities are getting carried out only through the power of God. We have to simply surrender to its control. Without getting subdued like this, why should we keep on scheming ‘I have to do this or I have to accomplish that?’. We know that the train carries all the luggage. Having known this fact, what is the point in travelling in a train, still carrying all the luggage on our heads?]

11. சுகம் என்பது என்ன?

ஆத்மாவின் இயல்பு நிலையே சுகம் தான்; சுகமும் ஆத்ம சொரூபமும் வேறு வேறு அல்ல. ஆத்ம சுகம் ஒன்றே உள்ளது. அதுவே சத்தியம். உலகப் பொருள்கள் எதிலும் சுகம் என்பது கிடையாது. அவைகளிலிருந்து சுகம் கிடைப்பதாக நாம் நமக்கு விவேகமில்லாத காரணத்தால் நினைக்கிறோம். மனம் எப்போது வெளியே வருகிறதோ அப்போது அது துக்கத்தை அனுபவிக்கிறது. நாம் நமது ஆசை பூர்த்தியாகும்போதெல்லாம் அனுபவிக்கும் சுகம் என்பது உண்மையில் நம் மனம் தனது உண்மை நிலையான ஆத்மாவுக்கு திரும்பி ஒன்றுவதால் கிடைக்கும் ஆத்ம சுகமே தவிற வேறில்லை.

ஆழ்ந்த தூக்கம், சமாதி, மூர்சையடைந்த மயக்க நிலை போன்ற நிலைகளிலும், ஆசைப்பட்டது கிடைக்கும்போதும், வெறுத்த பொருளுக்கு கேடு உண்டாகும்போதும் மனம் உள்முகமாகி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. இப்படி மனம் ஆத்மாவை விட்டு வெளியே போவதும் உள்ளே திரும்புவதுமாக ஓய்வின்றி அலைகிறது.

மரத்தடியில் நிழல் சுகமாய் இருக்கிறது; வெயிலில் சூரிய வெப்பம் கொடுமையாய் இருக்கிறது. வெயிலில் அலையும் ஒருவன் நிழலில் போய் நின்று குளிர்ச்சியை அனுபவிக்கிறான்; சிறிது நேரம் கழித்து வெயிலில் கிளம்பிப் போய், பிறகு மீண்டும் வெப்பதின் கொடுமை பொறுக்க முடியாமல் மரத்தடிக்கு ஓடி வருகிறான். இவ்வாறு நிழலிலிருந்து வெயிலில் போவதும், பிறகு வெயிலிலிருந்து நிழலுக்கு ஓடி வருவதுமாகத் திண்டாடுகிறான். இப்படிச் செய்பவன் விவேகமில்லாதவன்.

விவேகம் உள்ளவனோ நிழலை விட்டு நீங்க மாட்டான். இதுபோலவே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ, உலகியலில் ஈடுபட்டு துக்கம் அடைவதும், பிறகு இறைவனிடம் திரும்பி சுகமடைவதுமாக இருக்கிறது. உலகம் என்பது வெறும் நினைவே. உலகம் மறையும்போது அதாவது நினைவுகள் அழியும்போது மனம் ஆனந்தத்தை அனுபவிக்கிறது; உலகம் தோன்றும்போது துக்கத்தை அனுபவிக்கிறது.

[11.  What is happiness?

The very nature of Self is happiness. Happiness and Self are not different entities. What really exists is happiness of the Atman. It is the ultimate Truth. No worldly objects carry happiness. Due to lack of discrimination, we wrongly think that worldly objects give happiness. Whenever mind goes outward, it experiences only sorrow. Whatever happiness we experience when we satiate our desire, it is only the experience of mind turning inward and remaining united with Atman and nothing else.

Whatever bliss we experience when in deep sleep, samadhi or in a state of total unconsciousness, or when a desire is satisfied or when something bad happens to what hate is only the effect of mind turning inward and experiencing the innate happiness of the Atman. Thus the mind wanders restlessly by going outward and turning inward.

The shade under a tree is blissful. The heat of the sun is torturous in the open. A person wandering in hot sun enjoys happiness by taking shelter in the shade under a tree.  After some time, he goes out in the open again, suffers the heat and rushes back to the shade of the tree. Thus he suffers restlessly by shunting between the sunshine and tree shade over his head. Anybody who does so lacks discrimination.

The one with the right sense of discrimination will not leave the shade.  Likewise, the mind of a Jnani (Wise person) never leaves Brahman (God). But the mind of an ajnani (unwise person) gets into worldly activities and experiences pain; then it returns to God to experience happiness. World exists only in thought. When world disappears, that is, when there are no thoughts, mind experiences bliss. When world is perceived, mind experiences suffering.]

12.  தத்துவ ஞானத்தை புத்தக வாயிலாகப்  படித்தறிவது எத்தனை தூரம் முக்கியம்?

எல்லா ஆனமீகப் புத்தகங்களிலும்  முக்தி அடைவதற்கு மனதை அடக்க வேண்டும் என்ற கருத்தே சொல்லப்படுகிறது; மனதை அழிப்பதே ஆனமீக நூல்களின் முடிவான கருத்து என்று தெரிந்துகொண்ட  பிறகு,  மேலும் மேலும் நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயன் இல்லை.  அடக்குவதற்கு தன்னை யார் என்று விசாரிக்கவேண்டுமே  தவிர, புத்தகங்களில் போய் எதை விசாரிப்பது? தன்னை, தன்னுடைய ஞானக்கண்ணால் தானே தான் அறியவேண்டும். ராமன் தன்னை ராமன் என்று அறிந்துகொள்ளக் கண்ணாடியைப் போய்ப் பார்க்கவேண்டுமா என்ன!

‘தான்’ பஞ்ச கோசங்களுக்குள் இருப்பது. [பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்) என்பவை :  1. அன்னமய கோசம் (உணவால் ஆன உறை), 2. பிராணமய கோசம் (பிராணனால் ஆன உறை),  3. மனோமய கோசம் (மனத்தால் ஆன உறை),  4. விஞ்ஞானமய கோசம் ( தெளிந்த அறிவாலாகிய உறை, மற்றும் 5. ஆனந்தமய கோசம் (ஆனந்தத்தால் ஆன உறை)]. ஆனால் நூல்களோ இவற்றிற்கு வெளியேஇருப்பவை. ஆகவே, இந்த ஐந்து கோசங்களையம் (நான் இதுவல்ல என்று) நீக்கி விசாரித்து அறிய வேண்டிய ஆத்ம சொரூபத்தைப் புத்தகங்களில் தேடி அலைவது வீணே.

பந்தத்தில் சிக்குண்டிருக்கும் தன்னை யார் என்று விசாரித்துத் தன இயற்கை சொரூபத்தை அறிந்துகொள்வதுதான் முக்தி. எப்போதும் மனதை ஆத்மாவில் வைத்திருப்பதற்குத் தான் ‘ஆத்ம விசாரம்’ என்று பெயர். தியானம் என்பது தன்னை சச்சிதானந்த பிரம்மமாகப் பாவிப்பது. (நூல் அறிவும் ஒருவித தளையே ஆதலால்)  அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்!

குப்பையைக் கூட்டித் தள்ளவேண்டிய ஒருவன் அந்தக் குப்பையை ஆராய்வதால் பயன் உண்டா என்ன? அப்படியே, தன்னை அறியவேண்டிய ஒருவன், தன்னை அறிய விடாது மறைத்துக் கொண்டிருக்கும் தத்துவங்களனைத்தையும் கூட்டித்தள்ளாமல்  அவை இத்தனை என்றும் அவற்றின் குணங்கள் என்ன  என்றும் ஆராய்ந்துகொண்டிருப்பதால் பயனில்லை.

[12. To what extent it is essential to learn philosophical knowledge about Self through books?

It is stated practically in all spiritual books that control of the mind is essential to attain liberation. Having known that the foregone conclusion of all spiritual books is the annihilation of the mind, there is no purpose in reading numerous spiritual books more and more. To control the mind, one has to engage in self inquiry ‘who am I’;  what is there to keep inquiring in spiritual books? One has to identify his real Self through his ‘wisdom eye’ himself. For Raman to know that he is indeed Raman, should he go and look at the mirror?!

The sense of “I” is encased within 5 sheaths. (The following are the 5-sheaths — Pancha kosha: (1) Annamaya kosha — The sheath of food, (2) Pranamaya Kosha — the sheath of vital air , (3) manomaya kosha — the sheath of mind, (4) Vijnanamaya kosha — the sheath of the intellect and (5) Anandamaya kosha — the sheath of bliss). But books exist outside all these. Hence, it is futile to search the self in books, while the right way is to inquire and negate these sheaths one by one by discarding them by clarifying ‘I am not this’. 

Mukti (liberation) is to get freed from the fetters of worldly attachments and realize one’s true Self. Self inquiry is the process by which the mind is kept united with Atman forever. Meditation is a state of contemplation of oneself as Brahman (God beyond name and form). A state will come when all the bookish knowledge has to be forgotten (since bookish knowledge too, in a way, is a bondage).

When all the rubbish are meant to be swept and thrown away, what is the point in analyzing them? In the same way, the philosophies that tend to hide the Truth of the Self and act as hindrance to know oneself are all meant to be swept aside; It serves no purpose in researching how many of them are there and what their characteristics are.]

13.  விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் உள்ள பேதம் என்ன?

இந்த உலகத்தையும் ஒரு கனவு போல் எண்ணிக்கொள்ளவேண்டும். விழிப்பு நிலை என்பது உண்மையில் ஒரு நீண்ட கனவு ; உறக்கத்தில் வரும் கனவு என்பது  மிகக் குறுகிய நேரம் உள்ள கனவு. அவ்வளவு தான் வித்தியாசம். அதைத் தவிர வேறு இல்லை. விழிப்பு நிலையில் நடக்கும் விவகாரங்கள் எல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ அதே அளவு கனவு காணும்போது அதில் ஏற்படும் நிகழ்வுகள் அந்தக் கனவு நிலையில் உண்மையாகவே தோன்றுகின்றன! கனவில் மனம் வேறொரு உடம்பை எடுத்துக்கொள்கிறது. விழிப்பு நிலை, கனவு நிலை இரண்டிலுமே நினைவுகளும் நாம ரூபங்களும் ஒரே சமயத்தில் எழுகின்றன.

 

[13. What is the difference between waking state and dream state?

We must presume this world too as a work of dream. In reality, waking state is a long dream, while the dream we see in sleep is of a short duration. That’s the only difference between the two and nothing really more. Whatever we experience in our waking state appears to be extremely real; In the same way,  as long as we are in dream state, the dreams we experience too are very real. In dream state, our mind takes up a new body. In both the waking state and dream state, thoughts, names and forms appear simultaneously.]

14.  உலகியல் வாழ்வை எப்படி நடத்திப் போகவேண்டும்?

மற்றவர்கள் எவ்வளவு கெட்டவர்களாய் இருந்தாலும் அவர்களை வெறுக்கக் கூடாது. விருப்பு, வெறுப்பு இரண்டுமே ஒதுக்கவேண்டியவைதாம்.

உலகியல் விஷயங்களில் மனதை அதிகம் ஈடுபட விடக்கூடாது. முடிந்தவரை அடுத்தவர் காரியங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது.

பிறருக்கு ஒருவன் ஏதேனும் கொடுத்து உதவினால், உண்மையில் அவன் தனக்கே தான் கொடுத்துக்கொள்கிறான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டால் பின்னர் யார்தான் கொடுக்காமல் இருப்பார்கள்?

‘தான்’ எழுந்தால்  எல்லாம் எழும். ‘தான்’ அடங்கினால், எல்லாம் அடங்கும்.எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து அடக்கமாய் நடந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மை உண்டு. மனதை அடக்கிக்கொண்டிருந்தால் ஒருவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்.

[14. How does one go about leading the worldly life?

Even if other people are of bad behavior, they should never be hated. Both likes and dislikes are to be discarded.

Mind should not be allowed to indulge in worldly thoughts much. To the extent possible, interfering in others’ affairs should be avoided.

Suppose one helps another by giving something, the truth is he is only helping himself. If this truth is understood, who will refrain from helping others?

If the sense of ‘I’ (ego)  rises up, everything arises. If it subsides, everything subsides. To whatever extent we humble ourselves, to that extent we are benefited.

If only the mind is in total control, one can live anywhere.]

If only the mind is in total control, one can live anywhere.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading