Posts

The Concept of Avatar in Hinduism (Tamil)

இந்து மதம் காட்டும் அவதாரக் கொள்கை

எப்போதெல்லாம் பூமியில் நல்லோர்கள் துன்பத்துக்கு உள்ளாகிறார்களோ, தீயோரின் கைகள் மேலோங்கித் தர்மம் நிலை குலைகிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரித்து வருகிறார் என்பது இந்து மதத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று.

அவதாரம் என்றாலே ‘இறங்கி வருதல்’ என்றுதான் பொருள். அவசியமான தக்க சமயம் வரும்போது இறைவன் அவதரித்து வருகிறார் என்கிற செய்தியை பகவான் கிருஷ்ணரும் பகவத் கீதையில் “யதா யதாஹி தர்மஸ்ய….” எனும் சுலோகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்:

அர்ஜுனா, எப்போதெல்லாம் தருமம் குன்றி அதர்மம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; சாதுக்களைக் காத்து, தீயோரை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் நான் வந்துதிக்கிறேன்(ப.கீ. 4-7,8)

இறைவன் மனித வடிவெடுக்காது வேறு வடிவில் அவதரித்து வந்த (மச்சாவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் போன்ற) அவதாரக் கதைகளையும் நமது இதிகாச புராணங்கள் விவரித்துள்ளன.

இந்துமதத்தின் அடிப்படையில் கடவுள் ஒருவரே. அவரை உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என்கின்றன. அந்தப் பிரம்மம் பெயர்-உருவங்களுக்கு அப்பாற்பட்டது. எங்கும் பரந்தது; எல்லாவற்றிலும் உள்ளது; எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. பார்க்கப் போனால் இந்தப் பிரபஞ்சத்தில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே அந்தப் பிரம்மத்தின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே. அந்தப் பிரம்மம் அணுவைக்காட்டிலும் நுண்ணியது; அதே சமயம் பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமானது.

ஆக, பிரம்மத்தில் எல்லாமே அடங்கியதால், பல்வேறு பெயர்-உருவத்துடன் கூடிய (ஈசுவரன் எனப்படும்) வழிபாட்டு தெய்வங்களும் அந்தப் பிரம்மத்தின் வெளிப்பாடே.

படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் எனும் மூன்று பிரதான தெய்வங்கள் இந்துமதத்தில் நாம ரூபங்களோடு கற்பிக்கப் பட்டுள்ளனர்.

அதில் விஷ்ணுவையே அந்தப் பரப் பிரம்மமாகக் கொண்டாடி வழிபடுவோர்கள் வைஷ்ணவர் எனப்படுகின்றனர். படைக்கும் கடவுளான பிரம்மாவே (படைப்புத் தொழிலை செய்வதற்காக) அந்த விஷ்ணுவின் நாபியிலிருந்து விஷ்ணுவால் தோற்றுவிக்கப் பட்டவர்தாம் என்பது வைஷ்ணவர்கள் கொள்கை.

சைவ சம்பிரதாயப்படியோ, சிவனே அந்த பரப் பிரம்மம். அவரே எல்லாம். அவரது அடியும் முடியும் கூட பிரம்மா விஷ்ணுவுக்கு எட்டமுடியாதவை என்று சைவ புராணங்கள் கூறும்.

அவ்வாறே சக்தியை பரப் பிரம்மமாகக் கொண்டாடும் சாக்தர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவனைப் படைத்ததே அந்த சக்திதான் என்பார்கள்.

நம்பிக்கைகள் எப்படி இருந்தாலும், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் பிரதானக் கடவுளர்கள்; அவதாரங்கள் அல்ல.

(ஆயினும் ஒரு சில சாத்திரங்களில் இம்மூன்று தெய்வங்களையும் ‘குணாவதாரங்கள்’ என்று குறிப்பிடுவதும் உண்டு. சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் பிரகிருதியின் முக்குணங்களில் பிரம்மா சத்வகுண அவதாரமாகவும், விஷ்ணு ரஜோ குண அவதாரமாகவும், சிவன் தமோகுண அவதாரமாகவும் உருவகப் படுத்துவர்).

ஆயினும் இவர்கள் மானிடப் பிறவிகள் அல்லர்;  பிறப்பு இறப்பு அற்ற நித்திய தெய்வங்களாகவே கூறப்படுகின்றனர். புராணங்களில் இவர்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறப்படும் கதைகள்,  ஈசுவர லீலை என்பதாக அறியப்படும்.

விஷ்ணுவின் அவதாரங்கள்

நமது புராணங்களின் படி (விஷ்ணு புராணம், பாகவத புராணம் போன்றவற்றில்) பகவான் விஷ்ணுவே பற்பல அவதாரங்கள் எடுத்து உலகியரை இரட்சிக்க வருகிறார் என்று கூறுகின்றன. அவற்றில் பத்து அவதாரங்கள் சிறப்பாகக் குறிப்பிடப் படுகின்றன. அவை:

(1) மத்ஸ்யாவதாரம் (2) கூர்மாவதாரம் (3) வராகாவதாரம் (4) வாமனாவதாரம் (5) நரசிம்மாவதாரம் (6) பரசுராமாவதாரம் (7) ராமாவதாரம் (8) கிருஷ்ணாவதாரம் (9) பலராமாவதாரம் (10) கல்கியாவதாரம்.

பலராமருக்குப் பதில் புத்தரை அவதாரமாகச் சொல்வதும் உண்டு. கல்கி அவதாரம் இனிமேல்தான் கலியுகத்தில் நிகழவிருக்கிறது என்பது நம்பிக்கை.

அவதாரங்கள் பத்துக்குள் அடங்குவதல்ல

ஆயினும், இந்துமதப் புராணங்களிலேயே தலையாயதாகவும், பக்தி, ஞானம் இரண்டையும் சிறப்பாக விளக்கும் புராண நூலாகவும் கூறப்படும் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மேற்கண்ட 10 அவதாரங்களுக்கும் உபரியாய் மேலும் 17 அவதாரங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவர்களது சரித்திரங்களும் பாகவதத்தில் தரப்பட்டுள்ளன. (ஆக 27 அவதாரங்கள்). அந்த அவதார புருஷர்கள்:

(11) சனகர் (12) சனந்தர் (13) சனாதனர் (14) சனத்குமாரர் (15) நாரதர் (16) நரர் (17) நாராயணர் (18) கபிலர் (19) தத்தாத்ரேயர் (20) யாக்ஞர் (21) ரிஷபர் (22) பிருது (23) மோஹினி (24) கருடன் (25) தன்வந்திரி (26) வியாசர் (27) புத்தர்.

அவதாரத்தில் தெய்வீக வெளிப்பாட்டின் அளவு – பூர்ணம், அம்சம், கலை

நமது சில சாத்திரங்களில் படைப்பிலுள்ளவற்றில் வெளிப்படும் இறை சக்தி பற்றிக் குறிப்பிடும்போது ‘கலை’ எனும் ஓர் அளவைக் கூறுவதுண்டு. அதன்படி, செடி கொடிகளுக்கு 2 கலை, மிருகங்களுக்கு 2 – 3 கலை, சாமானிய மனிதர்களுக்கு 5- 6 கலை, ரிஷிகளுக்கும் மகாத்மாக்களுக்கும் 7 – 8 கலை என்றெல்லாம் சொல்வார்கள். ராம அவதாரம் 12 கலை; கிருஷ்ணாவதாரம் 16 கலை என்பார்கள். 16 கலை அளவுள்ள கிருஷ்ணாவதாரம் பூர்ணாவதாரம் (முழுமையான அவதாரம்) எனக் குறிப்பிடப்படுகிறது.

இவை தவிர, இறைவனின் ஒரு அம்சம் மாத்திரம் வெளிப்படும் அவதாரங்கள் அம்சாவதாரங்கள் எனப்படுகின்றனர். அதன்படி, மச்ச, கூர்ம, வராக, பலராம அவதாரங்களை அம்சாவதாரங்கள் என்பார்கள். ராமாயணத்தில் வரும் லக்ஷ்மண, பரத சத்ருக்கினர்களும் விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்களே.

மேலும் சக்தி ஆவேச அவதாரங்கள் என்றும் ஒரு வகை சொல்லப்படுகிறது. இறைவனின் உக்கிரமான சக்தி இந்த அவதாரங்கள் மூலம் வெளிப்பட்டு பெருமளவில் அழிக்கும் சக்தி வேலை செய்யும். பரசுராமர் அவதாரம் சக்தியாவேச அவதாரமாகக் குறிப்பிடப் பெறுகிறது. நரசிம்மாவதாரமும் அவ்வாறே.

அவதாரங்கள் எண்ணிக்கைக்குட்பட்டவை அல்ல

அவதாரங்கள் எண்ணிலடங்கா என்றும் ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுவதாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவதுண்டு. அது மெய்யாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் இறையவதாரங்களைப் பற்றி (10 அவதாரங்கள், 27 அவதாரங்கள் என்றெல்லாம்) குறிப்பிடும் புராணங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பட்டவை. எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் நிகழ்கிறது என்கிற கூற்றின்படி பார்த்தால், புராண காலத்துக்குப் பிற்பாடும் அவதாரங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தாகவேண்டும் என்பது தெளிவாகிறது.

அவதார புருஷர்கள்

அப்படிப் பிற்காலத்தில் வந்த சில மகாத்மாக்கள் பக்தர்களால் அவதார புருஷர்களாகக் கொண்டாடப் பெறுகின்றனர். மெய்யான ஆன்மீக நாட்டம் உள்ள சாதகர்கள், நமது பண்டைய சாத்திர நூல்களுக்கும், புராணங்களுக்கும் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை இவர்களது போதனைகளுக்கும் வாழ்க்கை சரிதங்களுக்கும் அளிக்கிறார்கள்.

அவர்களில் சிலர்:

 • ஸ்ரீ ஆதி சங்கரர் — இவரை சிவனின் அவதாரமாகக் கருதுகின்றனர்.
 • ராமானுஜர்: தென்னாட்டு வைணவர்கள், இவரை லக்ஷ்மணன்/ பலராமன் /ஆதிசேஷனின் அவதாரமாகக் குறிப்பிடுவர்.
 • சைதன்ய மகா பிரபு: வங்காளத்தில் இவர் ராதையின் அவதாரமாகக் கொண்டாடப் பெறுகிறார்.
 • ஷிர்டி சாய்பாபா: மதங்களைக் கடந்து நிற்கும் இறைவனின் அவதாரமாக ஷிர்டி சாய் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார்.
 • சத்ய சாய்பாபா: சிவ சக்தியின் அவதாரம் என்பார்கள் சாய் பக்தர்கள்.
 • ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சர்: இவர் காளியின் அவதாரமாகவும், சைதன்யரின் மறு அவதாரமாகவும் அதே சமயம் மதங்களைக் கடந்து நின்ற ஞானியாகவும் போற்றப் படுகிறார்.
 • பகவான் ரமண மகரிஷி: பூரண ஞானியான இவர் அவதாரம் எனும் கோட்பாட்டுக்குள் வராதவர் எனினும் அவரை முருகனாகக் கண்டு தரிசித்து முருகனின் அவதாரமாகக் கூறும் பக்தர்களும் உண்டு.
 • (அம்மா) மாதா அமிர்தானந்தமயி தேவி: தேவி பராசக்தியின்/ லலிதாம்பிகையின்/ பவதாரிணியின் அவதாரமாகவே இவரது பக்தர்கள் இவரைப் போற்றுகின்றனர். இவரை ‘சிவ சிக்தி ஐக்கிய ரூபிணி’ என்றும் கூறுவர். ஸ்ரீ ராம கிருஷ்ணர்-சாரதா தேவியின் அவதாரத்தின் தொடர்ச்சி என்பார்கள் ராமகிருஷ்ணர் பாரம்பரியத்தில் வந்து அம்மாவிடம் சேர்ந்த பக்தர்கள்.

இவர்களில் பலரும் தம் தாய் மொழியிலேயே, சாமானியருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையாகத் தமது உபதேசங்களை நல்குவர். ஆயினும் இவர்களது வாக்குகள் நமது பண்டைய சாத்திரங்களின் சாரமேயன்றி வேறில்லை என்பதை சான்றோர் அறிவர்.

Former President Abdhul Kalam with Amma (Mata Amritanandamayi)

இவர்களது எளிய மொழிகள் சிக்கலான சாத்திரங்களுக்கும் தெள்ளிய விளக்கங்களாக அமையும். அது மட்டுமல்லாது, கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப சனாதன மதத்தில் சில மாற்றங்களையும் புதிய பாதைகளையும் உருவாக்கித் தம் பக்தர்களை வழிநடத்துவர் இந்த அவதார புருஷர்கள்.

இவர்களில் சிலர் சுயம்புக்கள். அதாவது பிறவியிலிருந்தே ஞானம் பெற்றவர்கள். ஆயினும் அவதார புருஷர்கள் சிலர் தம் இளம் சாதனா காலத்தில் ஒரு குறிப்பிட்ட தெய்வ ரூபத்தை பக்தி செய்தவர்களாகவும், ஒரு குறிப்பிட்ட ஆன்மீகப் பாதையைக் மேற்கொண்டவர்களாகவும் இருந்து தம் இறை நிலையை எத்தியதாகவும் நாம் அவர்கள் சரிதத்தில் காண்போம்.

ஆனால் நிறை நிலை பெற்ற அவர்கள் பெரும்பாலும் மதங்கள், உட்பிரிவுகள், சாதி, இன வட்டங்களின் எல்லைகளைக் கடந்து நின்று, அனைத்து வகை மக்களையும் ஈர்க்கும் ஓர் தெய்வீக அன்பின் வடிவங்களாகவே இருப்பார்கள். பல்வேறு ருசிகள், வாசனைகள், வேறுபாடுகளைச் சுமந்து கொண்டு தம்மிடம் வரும் அன்பர்களுக்கு அவரவர்களுக்கு ஏற்ற ஆன்மீக மார்க்கத்தைக் காட்டியருளுபவர்களாக விளங்குவார்கள். அறிவியலுக்கோ, பகுத்தறிவுக்கோ எட்டாத எத்தனையோ அற்புதங்களை இவர்கள் தம் பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திக் காட்டி தம்மைச் சரணடைந்தவர்களின் சிரத்தை, பக்தி, விசுவாசத்தைத் திடப்படுத்தி ஆன்மீக வாழ்வில் முன்னேற ஒளி நல்குவார்கள்.

பக்தர்கள்கள், ஆன்மீகத் தேடல் மிக்க சாதகர்களைத் தவிர, கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்ட சாமானிய மக்களும் கூட அவதார புருஷர்களால் பெரிதும் ஈர்க்கப் பட்டு வந்து அவர்களைச் சரணடைந்து, அவர்களின் அருளால் தம் உலகியல் வாழ்வில் வரும் கஷ்டங்கள், நோய்கள், பிரச்சனைகள், துக்கங்களுக்கு எளிதில் தீர்வுகாண்பார்கள். தாம் பெற்ற அத்தகைய அற்புதமான நிவாரணங்கள் மூலம் அவர்களது இறை நம்பிக்கை திடமாகி, அவர்களும் காலப் போக்கில் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் பக்குவம் பெறுவார்கள்.

கவனிக்க — ஞான மார்க்கத்தில் அவதாரம் எனும் பேச்சுக்கு இடமில்லை

நமது இந்து மதத்தின் அத்வைதக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஞான மார்க்கத்தில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு அல்ல. படைப்பில் உள்ள அனைத்துமே இறைவனே;  மாயையினாலும் அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டு ஜீவன் தன்னை இறைவனிடமிருந்து வேறாய் எண்ணும் அஞ்ஞானத்தினால் பேதத்தைக் காண்கிறான். அந்த அஞ்ஞானம் போனால், தான் இறைவனேயன்றி வேறில்லை என்பதை ஜீவன் உணர்வான். ஆக, நாம் எல்லாருமே அடிப்படையில் இறை சொரூபமே. ஆகவே எவரோ ஓரிருவர்தான் அவதார புருஷர்களாய் வருகிறார்கள் என்கிற கோட்பாடு ஞான மார்க்கத்தில் இல்லை! நாம் எல்லாருமே அவதாரங்கள் தான்!

ஆனால் (நான் வேறு இறைவன் வேறு) எனும் துவைத உணர்வை ஏற்கும் பக்தி மார்க்கத்தில் அவதாரம் ஓர் முக்கியமான விஷயமாகிறது. பக்தர்கள் இறைவனுடன் கூடி வாழ்ந்து அவன் லீலைகளைக் கண்டு ஆனுபவித்து ஆனந்திக்கும் பேறைத் தரவே இறைவன் அவதரித்து வருகிறான்.

அவதார புருஷர்களை எல்லோராலும் அடையாளம் காணமுடியாது

இறைவனின் மாயா விளையாட்டில் இதுவும் ஓர் முக்கியமான நிதர்சனமே!

இன்று நாம் இறையவதாரங்களான ராமரையும் கிருஷ்ணரையும் தெய்வமாகக் கொண்டாடினாலும், அவர்கள் அவதரித்த காலத்தில் அவர்களை எதிர்த்தவர்களும், விமரிசித்தவர்களும் அவதூறு பேசியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்!

பொதுவாகவே மிகப் பரவலாய் பலருக்கும் இறைவனை ஏதோ தொலை தூரத்தில் ஆகாயத்தில் ஒரு வைகுண்டத்திலோ, சுவர்க்கத்திலோ, பர மண்டலத்திலோ, கைலாயத்திலோ இருப்பதாக ஒப்புக்கொள்வது தான் எளிதாக இருக்கிறது. அடுத்தபடியாக,  இறைவனின் வெவ்வேறு ரூபங்களையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனித வடிவில் வாழ்ந்த அவதாரங்களான ராமரையும், கிருஷ்ணரையும் கோவில்களில் விக்கிரக வடிவில் கும்பிட்டு வணங்கிப் போவதே ஏற்புடையதாக இருக்கிறது. நிகழ் காலத்தில்,  நம்முள் ஒருவராக ரத்தமும் சதையும் கொண்ட மனித வடிவில்  ஒருவரை இறைவனாகக் காண்பது ஒப்ப முடியாமல் இருக்கிறது!

வரையறைக்கு உட்பட்ட தன் சிற்றறிவை வைத்துக்கொண்டு, மகாத்மாக்களை எடை போட்டு அவர்களை இழித்துப் பேசுவதும், அவதூறுகளைக் கூறுவதும், ஏமாற்றுப் பேர்வழிகள், பாமர மக்களிடம் மூட நம்பிக்கையை வளர்த்து முட்டாளாக்குபவர்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவர்கள், போலிச்சாமியார்கள் என்றெல்லாம் சொல்லியும் எள்ளி நகையாடுபவர்கள் பலர் உண்டு.

சமீப காலத்தில் வாழ்ந்து செத்துப் போன மகாத்மாக்களைக் கூட ஒரு வேளை ஒப்புக்கொண்டாலும் கூட,  உயிரோடு வாழும் அவதார புருஷர்களை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்!

ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவதாரங்கள்  பற்றிக் கூறும் கருத்துகள் மிக முக்கியமானவை

தம்மை ஓர் அவதாரமாக தம் அந்தரங்க பக்தர்களிடையே வெளிப்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறை அவதாரம் பற்றிப் பல பொன்னான கருத்துகளை  மிக எளிமையாகத் தம் உபதேசங்களில் தந்திருக்கிறார்.   அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்:

 • “அவதார புருஷர்களிடம் ஞானமாகிய சூரியனையும் பக்தியாகிய சந்திரனையும் ஒரே சமயத்தில் காண முடியும்.”
 • “இறைவனின் லீலைகளில் (திருவிளையாடல்களில்) , ஈசுவர லீலை,தேவ லீலை, நர லீலை, ஜகத் லீலை என்று பல லீலைகள் உள்ளன. நர லீலையில் (மனித லீலையில்)தான் அவதாரம் நிகழ்கிறது.”
 • “நித்தியம் யாருடையதோ, அவருடையதே லீலையும். பக்தர்களுக்காக லீலை. மனித வடிவில் பார்த்தால் தானே பக்தர்கள் அவரை நேசிக்க முடியும்?”
 • “இறைவன் மனிதர்களிடம் அதிகம் பிரகாசிக்கிறான்; இறைவனைத் தேடவேண்டுமென்றால், அவதார புருஷர்களிடம் தேட வேண்டும் . பசுவின் சாரம் அதன் பால்; பால் வேண்டுமென்றால் பசுவின் மடியில் தான் தேடவேண்டும். அவதார புருஷர்கள் பசுவின் மடியைப் போல.”
 • “அவதார புருஷர்களை அறிய விரும்பினால், இறைக் காட்சி பெற விரும்பினால் சாதனை அவசியம்”.
 • “ஞான ஆராய்ச்சி வழியில், இறைவனில் லீலை கனவு போல உண்மையற்றதாகி விடுகிறது; ‘நான்; எனும் எண்ணம் கூடப் பறந்துவிடுகிறது; இந்த வழியில் அவதாரம் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் இது மிகக் கடுமையான பாதை. பக்தர்களுக்கு உதவாது;  அதனால்தான் இறைவன் அவதரித்து பக்தியைக் குறித்து உபதேசிக்கிறார்; சரணடையச் சொல்கிறார்”.
 • “இறைவன் அவதார புருஷர்களிடம் தான் அதிகமாக வெளிப்படுகிறான்; எனவே அவதார புருஷர்கள் உடம்புடன் இருக்கும்போதே பக்தர்கள் அவர்களை வழிபட்டு சேவை செய்ய வேண்டும்”.
 • “இறைவன் மனிதனாக அவதரிக்குபோது அவரை [அந்த உருவில்] தியாயானிப்பது எளிதாகிறது. உடல் ஒரு திரை மட்டுமே. உள்ளே நாராயணன் உள்ளார். லாந்தர் விளக்கின் உள்ளே விளக்கு எரிவது போல்.”
 • “அவதார புருஷர்களை நினைப்பது, இறைவனை நினைப்பதே”.
 • “ராமன் இறையவதாரம் என்றால்  சீதையைப் பிரிந்தபோது அழுதாரே என்று கேட்கிறார்கள்.  பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடம்பை எடுத்து வந்தாலே, உடலுக்குள்ள பசி, தாகம் போன்ற பலவும் அவதார புருஷர்களுக்கும் இருக்கின்றன; ஏன், நோய், மனக்கவலை போன்றவை கூட இருக்கின்றன. அத்தகைய ஒருவரை அவதாரம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேட்கிறார்கள்.  இதற்கு “பஞ்ச பூதங்கள் எனும் வலையில் அகப்பட்டுக் கொண்டு பிரம்மமும் கண்ணீர் வடிக்கிறது” என்பது தான் என் பதில்”.

-=0()0=-

Loading

விபீஷண சரணாகதி- Surrender of Vibhishana – Significance

ராமாயணத்தில் ராமனின் சிறப்பான குணங்களாக வருணிக்கப் படும் ஒரு குணம் அவன் ‘சரணாகத வத்சலன்’ என்பது. அதாவது தன்னைச் சரணடைந்தவர்களிடம் மிகுந்த வாத்சல்யம் காட்டுபவன் என்று. அவனைச் சரணடைந்தவர் கைவிடப் படார்.

ராமாயணத்தில் ராமனை சரணடைந்தவர்கள் யார், யார்? அவர்களின், நோக்கமும் பின்புலமும் என்ன என்று பார்த்தால், விபீஷண சரணாகதியின் சிறப்பு புரியும்.

காகாசுரன்

ராமன், சீதை, இலக்குவனுடன் சித்திர கூடத்தில் வாழ்ந்தபோது, இவன் காக வடிவம் எடுத்து வந்து சீதையின் மார்பில் கொத்தினான். சீதை வலியால் துடிக்க, கோபம் கொண்ட ராமன் ஒரு குசப்புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரம் சொல்லி ஏவ, அது காகத்தை நோக்கி வந்தது. காகாசுரன் மூன்று லோகங்களையும் சுற்றிப் பறந்தாலும் அஸ்திரம் அவனை விடாது துரத்திற்று. வேறு வழியின்றி அவன் திரும்பிவந்து ராமனையே சரணடைய, ராமன் அவனை மன்னித்து, அவனைக் கொல்லாமல், அவன் ஒரு கண்ணை மட்டும் பிரம்மாஸ்திரம் தாக்கும் விதத்தில் அருள் செய்து அனுப்பினான். (பிரம்மாஸ்திரம் இலக்கைத் தாக்காது திரும்பாது என்பதால்).

இங்கே, முதலில் அசுரனின் குசும்பு/திமிர், பின் அச்சம், பின் உயிர் பிழைக்க வேறு வழியின்றி சரணாகதி.

சுக்ரீவன்

அண்ணன் வாலியிடம் ஏற்பட்ட பகையால் தப்பித்து ஓடி வந்து தனியே அஞ்சி வாழும் வானரன். ராஜபோகங்களை முன்பு அனுபவித்துப் பராகிரமசாலியாய் வாழ்ந்தவன். தன் காதல் மனைவி ருமையை அண்ணன் வாலி பெண்டாள வைத்துக்கொண்டதில் நொந்து போனவன்.

அவன் ராமனைச் சரணடைந்தது முற்றிலும் காரியார்த்தமானது. அண்ணன் தனக்கு இழைத்த அநீதிக்குப்பழிவாங்கும் உணர்வு, அண்ணனைக் கொன்று தன் மனைவியை மீட்டு கிஷ்க்கிந்தையை ஆளும் ஆசை, அதற்காகப் பராக்கிரமசாலியான ராமனின் உறவு.

ராமனுக்கும் சுக்ரீவனிடம் காரியார்த்தமான தேவை இருந்தது! அது, சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி. ஆக, சுக்ரீவனின் சரணாகதி, இந்த பரஸ்பரக் காரியார்த்தத்தின் காரணமாக நட்பு ஆனது. சுக்ரீவனின் வானர இயல்பு ராமனுக்குப் புரிந்ததால், பின்னர் அவன் மனம் மாறக்கூடாது என்பதற்காக தீ வளர்த்து அதன் முன்னே இருவரும் தமது நட்புக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

விபீஷணன்

அவனும் தன் சகோதரனனான ராவணனைப் போல அரக்கனே. ஆனால் சத்துவ குணம் மேலோங்கியவன்; தர்மம் அறிந்தவன்.

பொல்லாதவனான தன் அண்ணனின் திமிர், பராக்கிரமம், அதிகார பலம், முன் கோபம், யாரேனும் உபதேசம் தந்தால் கடும் கோபம் கொள்ளும் தீய குணம் எல்லாம் முற்றிலும் அறிந்தவன். ஆயினும் துணிந்து, சீதையை ராவணன் கவர்ந்து வந்தது தவறு, அவளைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் ராவணனிடம் மன்றாடியவன். ராமனின் தெய்வீக குணத்தை அறிந்து கொள்ளும் அருள் பெற்ற நற்குணவான்.

தர்மத்தின் பக்கம் நிற்பதா, அல்லது உயிருக்கு அஞ்சி, ரத்த பாசத்துக்கு வணங்கி (கும்பகர்ணன் போல) அண்ணனின் அதர்மத்துக்குத் துணை போவதா எனும் தர்மசங்கடம் வந்தபோது, தன் உறவு, செல்வம், பதவி, உறவுகள், சுற்றம் அனைத்தையும் விட்டுத் தன் அண்ணனின் பரம எதிரியான ராமனை சரணடையத் துணிந்தவன்.

அந்த சரணாகதியின் நோக்கத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பு எனும் ஒரு சுயநலம் இருந்தாலும், அதையும் தாண்டி தருமத்தின் பக்கம் நிற்பது என்பதுதான் பிரதானமாக இருந்தது. அதுதான் சத்துவ குணத்தோரின் மகிமை. அவனுக்கு சுக்ரீவனைப் போலத் தன்னை நாடு கடத்திய அண்ணனைப் பழிவாங்க வேண்டும் என்கிற முதல் எண்ணமோ, அல்லது அண்ணனை அழித்துவிட்டுத் தான் இலங்கை அரசனாக முடிசூட்டிக்கொள்ளவேண்டும் என்கிற ‘கணக்குப் போடும் புத்தியோ’ இல்லை!

பகைவனின் பாசறையிருந்து வரும் தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டான், அல்லது தாக்கி விரட்டுவான் அல்லது சேர்த்துக்கொண்டாலும் ராமன் சதா தன்னை சந்தேகப்படுவான் என்கிற அச்சமோ, ஐயமோ அவனுக்கு இல்லை! அதுவும் ஒரு தூய சத்துவ குணமே.

மேற்கண்டவை, விபீஷணனின் உயரிய தகுதிகள்.

இனி ராமனின் தெய்வீகத் தன்மையையும் இந்த சரணாகதி நிகழ்வில் பார்ப்போம்.

சரணாகதி தேடி வந்திருக்கும் பகைவனின் சகோதரனை சேர்த்துக்கொள்வதா கூடாதா என்பதை ராமன் தானே தனியாய் உடனே தீர்மானிக்கவில்லை! இலக்குவன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் உட்பட எல்லாரோடும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களது கருத்துகளைக் கேட்கிறான். அனேகமாக அனுமனைத் தவிர மற்றெல்லாருமே “பகைவனை நம்பக்கூடாது; ஏற்கக் கூடாது” என்றே அறிவுரை சொல்கின்றனர். அரச தர்மத்தின் படி அந்த அறிவுரையும் சரியே.

ஆனால் ராமனோ, அதை ஏற்கவில்லை. தான் விபீஷ்ணனை ஏற்க விரும்புவதாக ராமன் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறி விளக்குகிறான்:

 • என்னிடம் நட்புக்கரம் நீட்டி இன்முகத்தோடு வரும் ஒருவனை நான் மறுக்கமாட்டேன், கைவிடமாட்டேன் — அவனிடம் குறை இருந்தாலும் சரி.
 • அவன் அண்ணனோடு பகைத்துக் கொண்டுவருவதில் குற்றம் காணமுடியாது; அரச குடும்பங்களில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாவதும் உண்டுதான். அவன், தானே அரசனாவதிலும் விருப்பமுள்ளவனாக இருக்கக் கூடும். எல்லாரும் என்னையும் பரதனையும் போல இருக்க முடியுமா என்ன?
 • அவன் என்னிடம் நல்ல எண்ணத்துடன் வந்தால் என்ன, தீய எண்ணத்துடன் வந்தால் என்ன? அவனால் என்னை என்ன செய்துவிடமுடியும்? ஒரு விரலசைவில் என்னால் பகைவர்களை அழித்துவிடமுடியும்.
 • எதிரியே கையேந்தி பிச்சை கேட்டு வந்தாலும் அவனைத் தாக்காது அவன் கேட்டதை அளிக்க வேண்டும் என்பது தர்மம்.
 • “நான் உன்னவன்” என்று எவன் என்னைச் ஒரே ஒரு முறை சரணடைந்தாலும், அவனுக்கு எல்லவற்றிலிருந்தும் அபயம் நான் அளிக்கிறேன். இதுவே என் விரதம். (ராமனின் இந்த வாக்கைத் தாங்கி வரும் ஸ்லோகம் இது: “சக்ரித் ஏவ ப்ரபன்னாய தவ அஸ்மி இதி ச யாசதே, அயம் சர்வ பூதேப்யோ தாமி ஏதத் வ்ரதம் மம“)

கவனிக்க: விபீஷணனுடன் உறவு பூண்டால் எனக்கு என்ன ஆதாயம் என்று ராமன் எண்ணவில்லை. (ஆனால், முன்பே கண்டபடி அந்தத் தேவை சுக்ரீவனிடம் பூண்ட நட்பில் இருந்தது!)

ராமனின் இந்த விளக்கங்களை எல்லாரும் வியந்து ஏற்கின்றனர். விபீஷணன் அழைத்துவரப்படுகிறான். ராவணனின் சரண் புகுகிறான். ராமன் ராவணனின் பலம், திறன், படைகள் பற்றிக் கேட்கிறான்; விபீஷணன் விளக்குகிறான்; ராவணாதியரைக் கொல்ல தன்னாலான எல்லா உதவிகளையும் தர வாக்குறுதி தருகிறான்.

ராமன் உடனே இலக்குவனை கடல் நீரைக் கொண்டுவரச் சொல்லி, விபீஷணை இலங்கைக்கு அரசனாகப் பட்டாபிஷேகம் அங்கே, அப்போதே செய்து வைக்கிறான்!

கவனிக்க: இங்கே நடந்தது சுக்ரீவனிடம் நடந்தது போன்ற ஓர் நட்பு ஒப்பந்தம் அல்ல. இது மெய்யான சரணாகதி! ராமன்தான் தலைவன்; விபீஷணன் தாசன்.

சரணாகதி செய்தவனின் மேன்மை, அதனை அங்கீகத்தவனின் தெய்வீகம் இரண்டுமே பொன்போல் ஒளிரும் ஓர் நிகழ்வு இந்த விபீஷண சரணாகதி!

சரணாகதி அல்லது பிரபத்தி எனும் மார்க்கத்தைப் பிரதானமாக முன் வைக்கும் வைணவத்தில் இந்த விபீஷண சரணாகதி நிகழ்வு, வைணவர்களுக்குப் மாபெரும் நம்பிக்கையைத் தரும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகிறது.

(ஆதாரம்: வால்மீகி ராமாயணம்)

Loading

An introduction to the various Gods in Hinduism

Hinduism is not just a religion. It is known as ‘Sanatana Dharma‘ a righteous way of life. Hinduism has multiple facets, multiple schools of philosophies and multiple sub-sects but all ultimately leading to one highest truth. Hinduism is not a religion of multiple Gods as some non-Hindus wrongly believe. Hinduism actually accepts worshiping and adoring varying forms of the One God – called Brahman,Parabrahman or Paramatman. Hinduism recognizes the fact that different people have different tastes, temperaments and capacity of intake in the matter of religion. Hence it offers ‘different strokes for different folks’. 

In real life, a woman found distasteful to one man can be the soul stirring sweet-heart of another man. When such a difference is taste can exist, why not allow different tastes in worshiping the God? This is precisely the logic behind the idea of multiple God forms in Hinduism.

Thus, Hinduism permits you to choose a specific God form most appealing and lovable to you; it encourages you to believe wholeheartedly that that particular God form indeed is the one supreme God. A chaste woman considers her husband alone to be the most handsome and most wonderful person; likewise, at the lower steps of religion, a believer’s conviction that his personal God alone to be the most powerful and the “only true God” is also encouraged.

One essential feature of Hinduism is Yoga – meaning Union. The purpose of human birth is to attain this yoga – union of the individual soul with the supreme soul. One of the path for this Yoga is the emotion-laden – the path of Love towards God which is Known as Bhakthi Yoga (path of devotion). It is the most suited path for the majority. The other approach is intellectual – the Path of inquiry – known as Gnyana Yoga (Path of knowledge). Only in the path of Bhakti, worship of Gods in various forms are involved. In the later path (Gyana), God is perceived as formless and the ultimate goal is to realize by experience that the Individual soul and the Supreme soul are one and the same.

Both the paths are not strictly compartmentalized; They can co exist in an earnest aspirant and one path can lead to another. One can be more predominant than the other.

Now let us know more about the popular forms of Hindu Gods worshiped by the followers of Bhakti – devotees of God. Some of these Gods have their origin in Veda (The Supreme Holy Book of Hinduism) and also are found elaborated in Puranas and Itihas (Holy Mythological stories).

The holy trinity: Brahma, Vishnu and Shiva

In Hinduism, God is the omnipresent and the omnipotent who creates, protects and destroys the worlds and the beings. The ‘Creation’ function of God is worshiped as Brahma; The ‘Protection/sustenance’ aspect of God is worshiped as Vishnu and the ‘Destruction’ aspect of God is worshiped as Siva. These 3 are male Gods. They are endowed with human form conducive for loving worship.

 

Trimurti – (from left) Brahma, Vishnu and Shiva

 

The 3 goddesses – From left Saraswathi, the consort of Lord Brahma, Lakshmi (consort of Lord Vishnu) and Parvati (consort of Lord Shiva)

 Brahma, the creator

Brahma, is not commonly worshiped as a personal deity.

He is described as four headed. Worship of Brahma as a popular deity is not widely in practice. Worshipers of Vishnu treat Brahma as one who was created by Vishnu out from his Navel. The Female aspect of Brahma (his wife) is Saraswati and she is the Goddess of learning and Art. Seeking the blessings of Saraswati is normally practiced for getting success in Education and fine arts.

 

Traditionally, Brahma, the creator, is never worshiped as a deity in temples. However, Saraswati is worshiped as a deity, though there are virtually no temples dedicated to Saraswati, except the one in Koothanoor, near Mayiladuthurai, Tamil Nadu.

The only historically old temple dedicated to Sarawati, at Koothanur.

Vishnu, the protector

Worshiping of Vishnu as Prime God is very widely practiced in Hinduism. Followers of this sect are known as Vaishnavas. Vaishnav believers will consider Brahma and Siva either as “part of the Whole” or as “Gods of lesser significance”. Vishnu, the protector is worshiped along with his divine female counterpart (wife) Lakshmi or Sri. Vishnu’s abode is Vaikunta. Vishnu the dark skinned and handsome God, with 6 hands and carries Sangu Chakra and Gatha (Conch, Wheel and a Maze) and he lies in the bed of a 5-headed snake.

Lord Vishnu at Vaikutha – His consort Lakshmi is at his feet. He is lying on the snake bed (Adisesha). On the left, stands Garuda his vehicle, Lord Brahma in a lotus emanating from his naval, Sage Narada and at the right, his ardent devotee Hanuman in Ramavatar.

Lakshmi is the goddess of wealth, prosperity and she is the holy mother who is very compassionate. She is the one who recommends to Vishnu to bless his devotees irrespective of their limitations and sins. Goddess Laksmi resides in the lotus heart of Vishnu. Vishnu in association with Lakshmi is called Sriman Narayana. Vaishanavaite temples have a separate Sannadhi (Sanctum Sanctorum) for Goddess Lakshmi. Worshiping Goddess Lakshmi alone as a stand-alone deity’ is not generally very prevalent (except in some specific holy places and occasions). Vishnu is a God of thousand names and every name of him is holy.

Avatars of Vishnu too are worshiped as gods

A fundamental belief in Hinduism is that God descends to earth to take birth as human (or other) forms whenever the good and piety suffer and the evil ones have an upper hand. God protects the good, destroy the evil and restore dharma (righteousness). Such a person is known as an avatar. Lord Vishnu is attributed with taking 10 such avatars. Rama, Krishna, Narasimha and other such divine personalities are Vishnu’s Avatars and they are worshiped as varying forms Vishnu. All forms of Vishnu or his Avatars can be worshiped in Idols and each of the idol is treated as Archavatar – God’s descended form for the purpose of worship.

Rama, an Avatar of Vishnu. He is a ruler with all noble qualities personified. His life history is elaborated in Ramayana.

 

Lord Krishna – Krishnavatar

 

Narasimha, a ferocious Avatar of Vishnu. He killed demon Hiranyakashipu, with his nails.

Shiva, the destroyer

Everything in the universe is subject to birth/evolution, growth, decay and finally destruction and these keep repeating in cycles. The destruction too is part of divine play and the Lord Shiva is the one attributed to it. Lord Shiva is associated with the profoundest religious knowledge –Gnyana. Worship of Siva as the prime deity is also very widely prevalent. Worshipers of Siva are known as saivas. Shiva is a God with the color of flame, wears a tiger skin, has smeared his body with ash and he carries a TriSul (3 pronged weapon). The holy river Ganges flows from his head.

Shiva, the lord of Gnyana (spiritual knowledge) and the destroyer.

Shiva’s divine consort is Shakti (also known as Parvati, Maya, Kali, Jagadamba and so on). She occupies the left-half body of Siva. Shiva and Shakti are like Matter and Energy. Shiva is the unfathomable, all pervading, passive representation of God while Shakti is associated with the prime-ordinal power without which no activity can ever take place. Puranas and hymns associated with Shiva declare that he is the prime God, the one above Vishnu and Brahma who has delegated the powers of creation and protection them.

Shakthi is worshiped as separate identity

Unlike Vaishnavism where Lakshmi is mostly worshiped as associated with Vishnu, Shiva’s divine consort on the other hand is also worshiped as a separate deity as Para Sakthi, the Universal Mother. Worshipers of Shakthi are known as Shaktas. Worship of Shakti as Divine Mother in innumerable names and forms (like the Kali, Parvati, Bhavani, Bhavatarini, Kamakshi and so on) is very widely prevalent all over India. Puranas and Hymns associated with Shakti will hail her as the Supreme God for whom all other gods like Vishnu, Shiva and Brahma are subservient.

Worship of Shakti as Univeral Mother is the sect of Saktam.

Sons of shiva-shakti viz. Ganesha and Subramanya are also worshiped

According to Puranas, Ganapathi (or Ganesha) and Lord Subramanya (or Muruga) are the sons of Shiva-Shakthi. Ganesha is a God with the head of an Elephant; He represents ‘Om‘ – the prime-ordinal Sound. He is hailed as the lord who removes obstacles in our endeavors. Subramanya is the knower of the supreme spiritual knowledge hidden behind Om. The sect worshiping Ganapathi as the prime God is known as Ganapatyam. The sect worshiping Subramanya as the Prime God is known as Koumaram. Worship of Ganapathi in the beginning of any new venture seeking his blessings is very common across believers of other God forms too. Worship of Ganapathi is very popular in Maharashtra region in India. Worship of Muruga (Subramanya) is quite popular in Tamil Nadu region of India.

Ganesha or Vinayaga. The first son of Shiva. He is elephant headed. He is symbolizes Om, the secret symbol of Hinduism.

Muruga or Subrahmanya, the younger son of Shiva. He is the knower of the knowledge behind Om.

Lord Subrahmanya (Murugan)

Lord Subrahmanya is worshipped as Muruga in South India (Tamil Nadu) and He is one of the most popular God of Tamils. For more on Lord Muruga, please read : Murugan, the God of the Tamils

Lord Aiyappa (Harihara Putra) is another popular God of South India

Aiyappa according to some Purana story is born by the union of Shiva and Vishnu (when Vishnu once took a female form as Mohini) and he is a popular godhead in Kerala and Tamil Nadu of South India. He is an extremely benevolent God who fulfills wishes of his followers who are willing to undertake take a physically taxing journey to his abode in hills after practicing austerities in a prescribed manner.

Anjaneya, the servant of lord Rama is another popular godhead

Anjaneya, (or Hanuman) according to Ramayana (the Holy life history of Lord Rama) is a monkey (or a monkey faced native clan) who is extremely powerful yet very wise and humble, is fully devoted to Rama and ever ready in serving his Lord. He is a Nitya-suri (a deathless person), who loves all the devotees of his lord dearly and melts in emotion hearing the name Rama. He is a combination of power, knowledge, humility and devotion. Though he is not a God per se, he is one of the widely worshiped divine-personality in India cutting across the various followers of Gods.

Lord Anjaneya (Hanuman, Bajrangbali)

Anjaneya or Hanuman, the humble sevant of Lord Rama. Wherever the name of Rama is chanted he will be there with eyes overflowing with tears of joy, to bless the devotees of Rama.

There are other Avatara Purushas worshipped, not limited to the ten of lord Vishnu

Any human being, extremely endowed with divine qualities, who has realized God or attained the supreme knowledge of the Brahman, who has transcended birth and death, who continues to live in Human body a Jivan Mukta, who has the power to guide or initiate his followers to the attainment of the supreme bliss is treated as Avatara Purusha or a Sat Guru (Religious guide of the Supreme Order). Hinduism permits worship of these great souls as though Gods by the respective believers. Hinduism abounds with such great masters – Chaitanya Deva, Ramakrishna Paramahamsa, Ramana Maharshi, Saibaba, Ramanuja, Shankara, Madhva, Shivananda, Mata Amritanandamayi and so on.

With so many gods around, where to start?

Every Hindu family invariably worships a ‘Family Deity’, based on their tradition and the sect they normally belong to. Thus a Vaishnavaite family traditionally worships the form of Vishnu or any of his Avatars and a Saivaite family member worships Shiva. There is again scope for finer focusing – the idea of ‘Ishta Devata’ – the divine form most attractive and adorable to one’s heart. If you are lured by Rama, you can worship Rama with all your focus on him without really bothering about Krishna, Vamana or Narasimha who are none other than the supreme Lord Vishnu! Likewise, a Saivaite can chose the form of Nataraja (Siva the cosmic Dancer) for worship. A saivaite can also worship Linga which symbolically represents the form as well as formless aspect of Shiva. Though elders generally expect their off springs to follow their traditional God, there is really no bar for a Saivaite to worship Vishnu or any other God of his choice or vice versa.

What if one is not sure?

If an earnest seeker is not sure about his path or if he is not charmed by a particular path of Hinduism that his family practices, the prescribed way is that he should go and surrender to a Satguru of his liking and seek guidance. The Satguru will guide him appropriately. A true Satguru will use his inner vision to judge the capacity of the seeker and put him on a path most suited to him. A satguru may even recommend a person who seeks Bhakthi to follow the path of knowledge; he may divert a person most keen in the path of knowledge, to go and worship a specific God form.

Hinduism basically is built on the fact that name and form can not be dispensed with for the vast majority of people in the worship of God. Every form of God is only a representation of the one ultimate truth. The more a seeker progresses in his path, the better he grasps this fact. But those who are at the lower levels of spirituality are the ones who get sentimentally attached to their chosen Idol and argue or fight with believers of other forms of God.

 

Loading